Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான், ஏ.எச்.ஏ. ஹுஸைன், கனகராசா சரவணன்
கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்ற அச்சம் காரணமாக, வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பொருட்டு, கிருமிகளை அழித்தொழிக்கும் பொருள்கள் அதிகம் விற்பனையாவதாக, வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரோனா வைரஸ் பரிசோதனை முகாமாக ஜெயந்தியாயவில் பெற்றி கம்பஸ் அமைந்துள்ளமை, கோரோனா சிகிச்சை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அமையப்பெற்றுள்ளமை தொடர்பில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள், கொரோனா வைரஸ் பரவக்கூடும் எனும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் குறித்த தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற கிருமிகளை அழித்தொழிக்கும் பொருள்களை முண்டியடித்துக் கொண்டு கொள்வனவு செய்வதைக் காணமுடிகிறது.
அத்தோடு, கிருமிகளை அழிக்கக் கூடிய இயற்கை மருந்துப் பொருள்களான பெருங்காயம், மஞ்சள், கருஞ்சீரகம், கருஞ்சீரக எண்ணெய் உள்ளிட்ட இத்தியாதி ஆயுள்வேத மூலிகைகள் அதிகளவில் விற்பனையாவதாகவும் சில இடங்களில் இப்படிப்பட்ட மூலிகைப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
32 minute ago