Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2021 மே 12 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜயரத்தினம், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் இன்று (12) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரியகல்லாறிலிருந்து மட்டக்களப்புக்குப் பயணித்த ஓட்டோவை, கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்குப் பயணித்த பஸ் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஓட்டோ சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், அதில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தில் பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த ஓட்டோ சாரதியான அழகப்பர் மதிராஜ் (49 வயது) என்பவர் உயிரிழந்ததுடன், அவரது சடலம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பஸ்ஸின் சாரதி, களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
39 minute ago
40 minute ago