Princiya Dixci / 2021 மே 13 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி, பாலையடித்தோனா பகுதியில் நேற்று (12) மாலை இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட பிரச்சினையில் ஏற்பட்ட கருத்து மோதலையடுத்து வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் இருவர் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 21 மற்றும் 22 வயது இளைஞர்களே வெட்டுக்கு இலக்காகி சிசிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை காரணமாக இவ்வாறான குற்றச்செயல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாகவும் இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026