Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

-.வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சிப் பாதிப்புக்குள்ளாகி குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் மண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பருத்திச்சேனை, உன்னிச்சை, எட்டாம் கட்டை ஆகிய கிராமங்களுக்கு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஞாயிற்றுக்கிழமை (30) விஜயம் செய்தார்.
இதன்போது, இக்கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் மற்றும் கிராமவாசிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
இக்கிராமங்களிலுள்ள மக்களுக்கு பிரதேச சபையினால், குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. பல இடங்களில் நீர்த்தாங்கிகள் இல்லையெனவும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் கவனத்துக்கு கிராமவாசிகள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து மண்முனை மேற்கு பிரதேச சபைச்; செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இக்கிராமாங்களிலுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பணித்தார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago