Suganthini Ratnam / 2017 மே 03 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வ.துசாந்தன்
மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்குப் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டுப் பகுதியை குப்பையைத் தரம் பிரிப்பதற்காக இடமாகப் பயன்படுத்துவதற்கு அக்கிராம மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் குப்பை கொட்டும் பிரச்சினை தொடர்பாக மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் பிரதேச செயலத்தில் இன்று(3) கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விடுதிக்கல் கிராம மக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, மேற்படி குப்பைமேட்டிலுள்ள குப்பையை அகற்றி, அப்பகுதியைத் துப்புரவு செய்து, அவ்விடத்தைச் சுற்றி வேலி அமைத்து குப்பையைத் தரம் பிரிக்கும் இடமாகப் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரதேச சபைச் செயலாளர் ஜோன்பிள்ளை குமுதா தெரிவித்தார்.
இதற்கு இணக்கம் தெரிவித்த பொதுமக்கள், இந்த இடத்தைப் பராமரிப்பதற்கு காவலாளிகளை நியமிக்க வேண்டும். மேலும், அவ்விடத்தில்; தரம் பிரிக்கப்படும் குப்பையில் உக்கக்கூடியதை சேதனைப் பசளைக்காக பயன்படுத்தும் அதேவேளை, ஏனைய கழிவுகளை வேறிடத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறினர்.
விடுதிக்கல் கிராமத்திலுள்ள குப்பைமேட்டில் கடந்த திங்கட்கிழமை (1) மாலை திடீரெனத் தீ பரவியுள்ளது. இதனை அடுத்து, மேற்படி குப்பைமேட்டுப் பகுதியில் குப்பை போடுவதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (2) அக்கிராமவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago