2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

குழு மோதல்: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரினதும் விளக்கமறியல், எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி, காத்தான்குடியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்ய்பபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று (05) ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பிரசாரக் கூட்டமொன்று, காத்தான்குடி ஆறாம் குறிச்சி அலியார் சந்தியில் இடம்பெறவிருந்த நிலையிலேயே, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இந்த மோதல் சம்பவத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் கல் வீச்சுத் தாக்குதலில், மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X