2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மான் வளர்த்தவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், பைஷல் இஸ்மாயில்

மட்டக்களப்பு, கரடியானாறு பொலிஸ் பிரிவிலுள்ள பங்குடாவெளி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் அனுமதியின்றி மான் ஒன்றை வளர்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை, மார்ச் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.

இராணுவப் புலனாய்வுக் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய பங்குடா வெளி பிரதேசத்திலுள்ள குறித்த வீட்டை கரடியனாறு பொலிஸாருடன் வன விலங்கு அதிகாரிகள் முற்றுகையிட்டனர்.

இதன்போது, அங்கு மறைத்து வைத்திருந்த சுமார் 5 வயதுடைய மான் ஒன்றை மீட்டதுடன், வீட்டின் உரிமையாளரை கைது செய்தனர்.

அவரை,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று (23) ஆஜர்படுத்திய போது, அவரை மார்ச் மாதம் 9ஆதிகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மானை வன விலங்கு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான்  உத்தரவிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X