Niroshini / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
சர்வதேச விசாரணையின் போதே காணாமல் போனவர்களின் உறவுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என காணாமல் போனவர்கள் சார்பான உறவுகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பின் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்துள்ளார்.
காமாணல் போன உறவுகளைத் தேடிக் கண்டறிவது தொடர்பிலும்,யுத்த செயற்பாடுகளுக்கான விசாரணைகள் தொடர்பிலும் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
கடந்த 1985ஆம் ஆண்டிலிருந்து காணாமல் போனவர்களைக் கண்டறிந்து தருகின்றோம் என கடந்த கால ஆட்சியாளர்கள் வெறுமனே காலங்களைக் கடத்தி இதுவரையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எவ்வித பதிலையும் எமக்குத் தரவில்லை.
இனிமேலும் இலங்கை அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான பதிலைத் தரும் என நாம் நினைக்கவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும், வெளி நாட்டு பிரமுகர்களிடமும் நாம் இவ்விடயம் தொடர்பில் மிகவும் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.
புதிய ஜனாதிபதி பெறுப்பேற்று 8 மாதங்கள் கடந்த நிலையிலும், அவர் காணாமல் போனவர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் உறவுகளைப்பறியோ இதுவரையில் எந்த விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இருந்தபோதிலும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சர்வதேச தலையீடு காரணமாக சர்வதேசம் என்ன பதிலைத் தரப்போகின்றது என எமக்குத் தெரியாது.
ஆனால் சர்வதேசம் எமக்கு ஆக்கபூர்வமான பதிலைத் தரும் என எதிர்பார்த்திருக்கின்றோம்.
மட்டக்களப்பு மாட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் 600 பேரின் தரவுகள் எம்மிடம் உள்ளன. ஆனால் இதனை விட மேலும் பலர் உள்ளனர்.அது தொடர்பில், இன்னும் எம்மிடம் சரியான தகவல்கள் கிடைக்கல்லை, இருந்தலும் 600 இற்கு மேற்பட்டவர்கள் இந்த மாவட்டத்திலிருந்து காணாமல போயுள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பிட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
6 hours ago