Princiya Dixci / 2022 மார்ச் 16 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் வாகரை நீதி நிர்வாக பிரிவுக்கான அலுவலகம், நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி றிஸ்வானி றிபாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் அதிதிகளாக மாகாண சுகாதார சுதேச வைத்திய, சமூக சேவைகள், நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் கிராமிய மின் மயமாக்கல் அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன், திணைக்களத்தின் உதவி ஆணையாளர் திருமதி சரண்யா சுதர்ஸன், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.எம்.எச்.நயீமுத்தீன் கலந்துகொண்டனர்.
மேலும், திணைக்கள நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026