Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் சைக்கிள் பாவனையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் வின்சன்ட் மகளிர் தேசிய உயர் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்களால் சைக்கிள் சவாரி, இன்று (08) நடத்தப்பட்டது.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் சைக்கிள் சவாரி நிகழ்வானது பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இன்றைய சூழ்நிலையில் எரிபொருளின் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களை அதிகளவாக பயன்படுத்தும் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக, இதன் காரணமாக பாடசாலை மாணவர்களின் வரவும் குறைந்து வருவதால் சைக்கிளே சிறந்த தெரிவு என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த சைக்கிள் சவாரி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago