Editorial / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தாக்கம் தொடர்ந்தும் அதிகரித்து வருதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வி. குணராஜசேகரம் தெரிவித்தார்.
இவ்வாண்டு, ஐனவரி 1ஆம் திகதியில் இருந்து டிசெம்பெர் 13 வரை 1,879 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனரென, அவர் தெரிவித்தார்.
அதேவேளை, இம்மாதம் 06ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதிவரையும் 128 பேர் டெங்குத் தாக்கத்துக்குள்ளாகியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.
இந்தவாரம், மட்டக்களப்புப் பிரிவில் 30 பேரும் ஆரையம்பதியில் 21 பேரும், ஏறாவூரில் பேரும், களுவாஞ்சிகுடியில் 17 பேரும், செங்கலடியில் 14 பேரும், வாழைச்சேனையின் 07 பேரும், வவுணதீவில் 06 பேரும், வெல்லாவெளியில் 05 பேரும், ஓட்டமாவடியில் 04 பேரும், காத்தான்குடியில் 03 பேரும், பட்டிப்பளையின் இருவரும் கோறளைப்பற்று மத்தியில் ஒருவரும் டெங்குத் தாக்கத்துக்குள்ளாகினர்.
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
12 Apr 2026
12 Apr 2026