2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

தென்னங்கன்றுகள் வழங்கிவைப்பு

Editorial   / 2022 ஜனவரி 13 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுக்கு வீடு "கற்பகதரு" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம், வந்தாறுமூலையில் உள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் ஏறாவூர்ப்பற்றுக்கான பிராந்திய பணிமனை வளாகத்தின் இன்று (13) நடைபெற்றது.

பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகளை வழங்கினார்.

இதன்போது, 250 பயனாளிகளுக்கு தலா 03 தென்னங்கன்றுகள் வீதம் வழங்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .