Princiya Dixci / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
நல்லிரவில் தூங்கிக் கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலியை திருடன் ஒருவன் அறுத்துச் சென்றுள்ள சம்பவமொன்று, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பதுரியா நகரிலுள்ள வீடொன்றிலே நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது.
வீட்டார் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கதவை உடைத்து உள்நுழைந்த திருடன், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 10,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தையும் நகையையும் திருடிவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த யுவதியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துச் சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு திருட்டில் ஈடுபட்ட திருடன், அலுமாரியில் இருந்த விலையுயர்ந்த கையடக்கத் தொலைபேசியை திருடாமல் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இத் திருட்டுச் சம்பவத்தை கண்டுபிடிக்க வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
58 minute ago
1 hours ago