2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தாலிக்கொடி அபகரிப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் பெண்ணொருவரின் தாலிக்கொடி இனந்தெரியாத நபர்களினால் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இவர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வர்த்தக நிலையத்துக்கு வந்தவர்கள் குறித்த பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்றுள்ளனர். இதன்போது சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஏழரைப் பவுண் தாலிக்கொடியே பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தினை மூடிய தலைக்கவசம் அணிந்துவந்த இருவரே இந்த துணிகர கொள்ளைச்சம்பவத்தினை நடாத்தியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X