2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

பத்தாவது உபவேந்தராக கனகசிங்கம் தெரிவு

Editorial   / 2022 ஜனவரி 14 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்  , வா.கிருஸ்ணா, ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

உபவேந்தருக்கான தேர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவுக்குழுவின் பிரகாரமும், கிழக்குப் பல்கலைக்கழக பேரவையில் பிரகாரமும் முதல் நிலையில் தெரிவு செய்யப்பட்டு, மானியங்கள் ஆணைக் குழுவின் சிபார்சின் பிரகாரம், பேராசிரியர் கனகசிங்கம் அப்பதவிக்கு ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்பட்டார்.

மட்டக்களப்பு, கிரான்குளத்தினை சேர்ந்த கிரான்குளத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்ற பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், முகாமைத்துவ துறையில் முதலாவது பேராசிரியரும் திருகோணமலை வளாக முதல்வராக ஆறு வருடங்கள் பதவியும் வகித்தவருமாவார்.

இவருடைய காலப் பகுதியிலேயே திருகோணமலை வளாகம் பாரிய வளர்ச்சி அடைந்தது. கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இவர் பீடாதிபதியாக கடமையாற்றிய காலப் பகுதியில் மட்டக்களப்பு சமூகவியலாளர், கல்வியாளர்கள் மற்றும் வர்த்தக அங்கத்தவர் உடன் இணைந்து செயற்பட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .