Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 நவம்பர் 24 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
பிளாஸ்ரிக் போத்தல்களில் அடைத்து விற்கப்பட்டுவந்த பழவகைச்சாற்றில் அதிகளவான இரசாயன பதாத்தங்கள் கலந்துள்ளதையடுத்து அந்த உற்பத்தி கம்பனி உரிமையாளர், விற்பனை முகவர் உட்பட இருவரை 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் குறித்த பழச்சாறு போத்தல்களை கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் வியாழக்கிழமை(23) உத்தரவிட்டார்.
அரசடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் விற்பனை செய்யப்பட்டுவந்த மிகஸ்புரூட், மாம்பழம், வகைகளை கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாற்றை வாங்கி குடித்த பொதுமக்கள் பலர் குறித்த பழச்சாற்றின் சுவையில் அதிகளவு கச்சல் தன்மை இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இனையடுத்து குறித்த ஹோட்டலை கடந்த ஒக்டோபர் மாதம் முற்றுகையிட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் 200 மில்லி லீற்றர் பழச்சாறு போத்தல்களை கைப்பற்றி அந்த கடை உரிமையாளர், விற்பனை முகவர், உற்பத்தி கம்பனி உரிமையாளர் உட்பட 3 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
அத்துடன் கைப்பற்றப்பட்ட போத்தல்களின் மாதிரிகளை கொழும்பிலுள்ள இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து மிஸ்புரூட், மாம்பழம், பழச்சாறுக்களை இரசாயன பகுப்பாய்வினர் பரிசோதித்தன் பிரகாரம் அதில் பென்சோயிக் அமிலம், சல்ஃபர்டை, ஆக்சைடாக சல்பைட், பென்சோயிக் அமிலம் ஆகிய கலவைககளின் உள்ளடக்கம் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளமை கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும் இது மனித பாவனைக்கு உதந்தது அல்ல என இரசாயன பகுப்பாய்வு பிரிவினர், பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு வழக்கு விசாரணை வியாழக்கிழமை நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது வழக்கின் 2 ஆம் 3 ஆம் எதிரிகளான கம்பனி முகவர் கம்பனி உரிமையாளர் இருவருக்கும் தலா ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய்வீதம் இருவரையும் 2 இலச்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
குறித்த நாமம் கொண்ட பழச்சாறு போத்தல்களை விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்து உடனடியாக கைப்பற்றி அழிக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார்
33 minute ago
37 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
57 minute ago
1 hours ago