Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}


எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் உதவிகளையும் வழங்கி வைத்தார்.
இதன்போது சித்தாண்டி - 01, சித்தாண்டி - 02, சித்தாண்டி - 03, சித்தாண்டி - 04, மாவடிவேம்பு - 01, மாவடிவேம்பு - 02, வந்தாறுமூலை, ஒருமுலைச்சோலை, களுவன்கேணி ஆகிய கிராமங்களுக்கு சென்று வெள்ள பாதிப்பு;களை பார்வையிட்டார்.
மாவடிவேம்பு விக்னேஸ்வரா இடைத்தங்கல் முகாமில் உள்ள எழுபது குடும்பங்களுக்கு, சிறுவர்களுக்கான பொருள்;கள, பாய்களை வழங்கி வைத்தார்.
அத்தோடு சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலய இடைத் தங்கல் முகாமில் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கும், சித்தாண்டி இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய இடைத் தங்கல் முகாமில் உள்ள பதினான்கு குடும்பங்களுக்கும் பாயகளை வழங்கி வைத்தார்.
சீ.யோகேஸ்வரன் எம்.பி, அகில இலங்கை இந்து மாமன்றத்தினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய வழங்;கப்பட்ட நிதி மூலம், உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்போது வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் மற்றும் பேரவை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
11 Apr 2026
11 Apr 2026