Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
உயிர்த்த நாளில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது
சம்மேளனம் இன்று (22) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கடந்த 2019ஆம் ஆண்டு அரங்கேரிய காட்டுமிராண்டித்தனமான தற்கொலை பயங்கரவாத தாக்குதலின் இரண்டாம் வருட நினைவு தினத்தை நாமும் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நினைவுகூறுகின்றோம்
மேற்குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிர்களை இழந்த மற்றும் காயமடைந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் தங்கள் அன்புக்குரியவர்களினுடைய இழப்பால் துன்பப்படுகிற அனைவருக்கும் எல்லோருக்கும் பொதுவான இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.
உண்மையான குற்றவாளிகள் மற்றும் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தினூடாக முறையாக தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதாக என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
13 minute ago
17 minute ago