2025 மே 19, திங்கட்கிழமை

பிரதான வீதியில் டயர் போட்டு எரித்தவர் கைது

Editorial   / 2018 மார்ச் 07 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்,  துஷாரா

முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைக் கண்டிக்கும் முகமாக காத்தான்குடி பிரதான வீதியில் டயரைப் போட்டு எரித்த நபரைத் தாம் கைது செய்திருப்பதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுக் காலை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இயல்பு நிலையைக் குலைத்து வன்முறைகளைத் தூண்ட முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே, இக்கைது இடம்பெற்றதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X