Princiya Dixci / 2021 ஜூன் 22 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை 206சி கிராம அதிகாரி பிரிவில் 03 வீதிகள், இன்று (22) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பிரிவில் முதலாம் குறுக்கு, இரண்டாம் குறுக்கு மற்றும் அப்துல்லாஹ் குறுக்கு வீதி ஆகிய மூன்று வீதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணியின் பரிந்துரைக்கமைய, இவ்வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.
மேற்படி வீதிகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மறு அறிவித்தல் வரை இந்த 3 வீதிகளையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணி குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், வாழைச்சேனை பொலிஸார், வாழைச்சேனை பிரதேச சபையினர் மற்றும் கிராமமட்ட குழுவினர் ஆகியோர் இணைந்து குறித்த மூன்று வீதிகளுக்கு தடைகளைப் போட்டு பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்தினர்.
2 minute ago
23 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
23 minute ago
24 minute ago