2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சரை காப்பாற்ற ஜனாதிபதி முயற்சி

Lenin Raj   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலக்கரி மோசடியையும் ஏதேனும் ஒரு அதிகாரி மீது சுமத்தி, குமார் ஜயக்கொடியை ஜனாதிபதி காப்பாற்றுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இன்று (20) திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "இந்த அரசாங்கத்தை எவரும் பலவந்தமாக ஆட்சியில் அமரவைக்கவில்லை. மக்கள் வாக்களித்தே இவர்களை ஆட்சி பீடம் ஏற்றியிருக்கின்றனர். ஆனால், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்தே ஆட்சியைப் கைப்பற்றியுள்ளனர். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அரசாங்கத்திடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக அறிவித்தனர். ஆனால் நிலக்கரியில் மோசடி செய்துள்ளனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறையை இல்லாமல் செய்துவிட்டு, டீசல் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்கின்றனர். நிலக்கரி தொடர்பிலான ஆய்வக அறிக்கையையும் போலியாகத் தயாரித்து வழங்கியுள்ளனர். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இந்த நிலக்கரி நட்டத்திற்குப் பொறுப்பேற்குமா அல்லது ஏதேனும் ஒரு அதிகாரியின் மீது சுமத்தித் தப்பித்துக்கொள்ளுமா என அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.

சிறைச்சாலை ஆணையாளரைப் பதவி நீக்கம் செய்தனர், ஆனால் அவருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு வாயிலாக நீதி கிடைக்கப்பெற்றது. அதனை போன்று பிறர் மீது குற்றம் சுமத்தி குமார ஜயக்கொடியையும் காப்பாற்ற இந்த அரசாங்கம் முயற்சிக்குமா எனத் தெரியவில்லை. ஜனாதிபதி இவரை மும்முறை பாதுகாத்துள்ளார். பாராளுமன்றத்தில் 159 வாக்குகளை அளித்து அவரைக் காப்பாற்றியுள்ளார். இறுதியாக, இந்த அரசாங்கம் நிலக்கரி மோசடிக்கான காரணத்தை எவ்வாறு விளக்கப் போகின்றது என நாங்கள் அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பௌர்ணமி தினத்திலும் உழைப்பாளர் தின நிகழ்வுகளை முன்னெடுக்கச் சாத்தியமிருக்கின்றது எனக் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் அன்றைய தினம் விவசாயிகளுக்கு நல்லாசி வேண்டிப் பிரார்த்தனைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்" என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .