2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருளால் ஏற்படும் விபரீதம் பற்றிய விழிப்புணர்வு

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'போதையற்ற சகவாழ்வுடன் கூடிய நாடு' என்ற ஜனாதிபதியின் போதை ஒழிப்புத் திட்டத்துக்கு அமைய மட்டக்களப்பிலுள்ள நகரப் பாடசாலைகளில் மாணவர்களின் காலை ஒன்றுகூடலின்போது, சுமார் 30 நிமிடங்கள் போதைப்பொருளால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பு விமோச்சனா மதுபானப் பாவனையாளர் புனர்வாழ்வு இல்லத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்விகா சகாதேவன் தெரிவித்தார்.

ஏற்கெனவே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானோரை மீட்கும் வகையிலும் இனிமேலும்    போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகாமல் தடுக்கும் வகையிலும் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின்  அறிவுறுத்தலுக்கு அமைய  இப்;பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்துக்கல்லூரி, புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம், மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம், ஆனைப்பந்தி மகாவித்தியாலயம், புனித திரேசா பாடசாலை, சிசிலியா பெண்கள் பாடசாலை, இக்னேசியஸ் வித்தியாலயம், திராய்மடு தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இந்த விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்போது, போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றிய கையேடுகளும் விநியோகிக்கப்படுகின்றன.

எதிர்கால மாணவர் சமுதாயம் குடி நோயாளிகளாக வருவதைத் தடுக்கும் வகையிலேயே மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்புப் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X