Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆரையம்பதி கிழக்கு, திருநீற்றுக்கேணி குளத்துக்கருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதகை, விரைவில் முற்றாக உடைத்து, நீர் முழுவதுமாக வடிந்தோட ஏற்றவகையில் சீர்செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்தை, ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் ஆகியோர், நேற்று முன்தினம் (10) பார்வையிட்டனர்.
இதன்போது, திருநீற்றுக்கேணி குளத்துக்கருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதகை விரைவில் முற்றாக உடைத்து, வெள்ள நீர் வடிந்தோடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
இந்தக் குளத்தில் கட்டப்பட்டுள்ள மதகை உடைக்கக்கோரி, காத்தான்குடி பொதுமக்கள் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
4 hours ago
4 hours ago
7 hours ago