Editorial / 2022 ஜனவரி 25 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக பிரதேச செயலக ரீதியாக மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கை, இலங்கை மத்திய வங்கியினால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக, மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் தொடர்பாக விழிப்பூட்டும் செயலமர்வு, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (24) இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் கே.பிரபாகரன், திருகோணமலை முகாமையாளர் எம்.நிரோசன் ஆகியோரி கலந்துகொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நிதிசார் நிபுணத்துவம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய நிலவரம் தொடர்பாக விளக்கமளித்தனர்.
12 minute ago
7 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
7 hours ago
04 Feb 2026