Princiya Dixci / 2021 ஜூலை 11 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்
மனித பாவனைக்குதவாத, காலாவதியான மற்றும் முத்திரை இடப்படாத பெருமளவு உணவுப் பொருட்கள், மட்டக்களப்பு நகரில் கைப்பற்றப்பட்டதாக, மட்டக்களப்பு, கோட்டைமுனை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களை, சுகாதார அதிகாரிகள், இன்று (11) காலை முற்றுகையிட்டனர்.
இதன்போது, அங்கு விற்பனை செய்யப்பட்டுவந்த மனித பாவனைக்குதவாத, பழுதடைந்த பொதி செய்யப்பட்ட மரமுந்திரிகை விதைகள், கோதுமை மா, கடலை, பிஸ்கட்டுகள் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட காலாவதியான பானங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
சுமார் இரண்டு இலட்சம் பெறுமதியான பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago