2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மலசலகூடங்கள் அமைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மலசலகூட வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 27 மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் புதிய காத்தான்குடி 167ஏ, 167பி ஆகிய கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளிலேயே நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும் பிளேன் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.மேனகா தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் பிளேன் சிறிலங்கா நிறுவனத்தினால் இந்த மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

மலசலகூடங்களை நிர்மாணிக்கும் முகமாக அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கரினால் நடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X