Princiya Dixci / 2021 மே 10 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு நகரின் பல வீதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச் சந்தைகளை இன்று (10) சுற்றிவளைத்த பொலிஸார், முகக்கவசம் அணியாமை தொடர்பான திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்கவின் வழிகாட்டலில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சி தலைமையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, முகக்கவசம் அணியாத 55 பேரை கைதுசெய்து, அவர்களுக்கு கட்டாய அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் விடுவித்தனர்.
இதற்காக இரு பஸ்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பொலிஸார், மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று காலை குவிக்கப்பட்டனர்.
பின்னர் பொலிஸார், இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், திருகோணமலை வீதியிலுள்ள வர்த்தக நிலையங்கள், கொக்குவில் வாராந்த சந்தை, மட்டக்களப்பு பொதுச் சந்தை உட்பட பொதுமக்கள் கூடும் பகுதிகளை சுற்றிவளைத்து முகக்கவசம் அணியாத மற்றும் முகக்கவசத்தை சரியான முறையில் அணியாத வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 55 பேர் கைதுசெய்யப்பட்டு, பஸ்களில் ஏற்றப்பட்டனர்.
அவர்களை காந்திபூங்காவுக்கு அழைத்துவந்து, அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டதன் பின்னர் விடுவித்தனர்.
இந்த அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026