Princiya Dixci / 2021 ஜூலை 27 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மெய்ப்பாதுகாவலரின் விளக்கமறியல் உத்தரவை, எதிர்வரும் 9ஆம் திகதிவரை நீடித்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜுன் மாதம் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மகாலிங்கம் பாலசுந்தரம் (வயது 34) என்பவர் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மெய்ப்பாதுகாவலர் விளக்கமறியலில் இருந்துவரும் நிலையில், நேற்று (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, கொரோனா தொற்று காரணமாக சந்தேகநபர், நீதிமன்றத்துக்கு அழைத்து வரமுடியாத நிலையில், இந்த வழக்கு விசாரணை காணொளி மூலமாக இடம்பெற்றது.
கடந்த வழக்கின் தவணையின் போது உயிரிழந்தவரின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த வழக்கை மட்டக்களப்பு பொலிஸாரிடமிருந்து வேறு பிரிவுக்கு வழங்குமாறு, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மட்டக்களப்பு பொலிஸாரிடமிருந்து வழக்கு மீளப்பெற்றிருந்த நிலையில், மாவட்ட குற்ற விசாரணை பிரிவுப் பொலிஸார் அந்த வழக்கை செய்ய முற்பட்டபோது, குறித்த வழக்கை வேறு பிரிவுக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
எனவே, மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு இந்த வழக்கு செய்ய பெருத்தமற்றது என பொலிஸாருக்கு அறிவுரை வழங்கிய நீதவான், மெய்ப்பாதுகாவலரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026