2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாணவி துஷ்பிரயோகம்; ஆசிரியர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் குறித்த ஆசிரியருக்கு எதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதிவான் நீதிமன்ற பதில் நீதவானுமான எம்.பி.முகைதீன் ஒத்திவைத்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  அவர் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

மேலும், குறித்த ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறு  மட்டக்களப்பு நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்போது துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவியின் சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவியொருவர் துஷ்;பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டு,  இம்மாதம் 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும், கடந்த இரண்டாம் திகதி ஆசிரியரின் உறவினர்களினால் பிணை அனுமதி விடுக்கப்பட்டு இரண்டு சரீரப்பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X