Administrator / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்
சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் சிறுவர் செயலகத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான ஒருநாள் திசைமுகப்படுத்தல் பயிற்சிநெறி நேற்று (18) பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சிநெறியில் ஆலையடிவேம்பு பிரதேச முன்பள்ளி ஆசிரியைகள் முப்பது பேர் கலந்துகொண்டு பயிற்சிகளை பெற்றுக்கொண்டனர். இப்பயிற்சி நெறி மூன்று கட்டங்களாக நடாத்தப்பட்டிருந்தது.
நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியர் எஸ்.சுமனால் உடல்மொழி மற்றும் நடித்துக்காட்டல் முறையில் முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்பிக்கும் வழிமுறைகள் தொடர்பில் ஆசிரியைகளுக்கு பயிற்சிகள்; வழங்கப்பட்டன. இதில் சிறுவர் பாடல்களை அவற்றுக்கான அபிநயத்துடன் நடித்துக்காட்டல் தொடர்பான பயிற்சிகளும், உடல்மொழிகளைக்கொண்டு சிறுவர் கதைகளை உருவாக்கும் வழிமுறைகள் குறித்து ஆசிரியைகளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.
முன்பள்ளிச் சூழல்களில் இடம்பெறக்கூடிய எதிர்பாராத, அசாதாரண விடயங்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பான பயிற்சியினை பிரதேச செயலாளர் வழங்கினார்.
விவசாயத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரும் கடதாசிக் கைப்பணி, அலங்காரப்பொருள் தயாரிப்பில் தேர்ச்சி பெற்றவருமான கே.கயந்தராஜாவினால் முன்னெடுக்கப்பட்ட கடதாசி அலங்காரப்பொருள் தயாரித்தல் தொடர்பான பயிற்சியில், வீடியோ காட்சிகள் மற்றும் செய்துகாட்டல்கள் மூலமாக முன்பள்ளி மாணவர்களைக்கொண்டு, அவர்களின் புத்திக்கூர்மையை அதிகரிக்கக்கூடிய வழிகளைக்கொண்ட கடதாசி அலங்காரப் பொருட்களைத் தயாரிக்கும் பயிற்சிகள் ஆசிரியைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையிலும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.உஜெயந்தனின் ஏற்பாட்டின் கீழும் நடைபெற்ற பயிற்சிநெறியில், பிரதம அதிதியாக திருக்கோவில் கல்வி வலய ஆரம்பப் பாடசாலைகளுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.தர்மபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025