Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 26, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 மே 16 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.துசாந்தன்
கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் முறைகேடனான சம்பவங்கள் நடைபெற்றதாகவும் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களைப் பாடசாலையில் இருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் கோரி, வித்தியாலய மாணவர்கள் பாடசாலையின் முன்பாக, நேற்றுத் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஒரு சில ஆசிரியர்கள், மாணவர்களுடன் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் இதுதொடர்பில் அதிபருக்குத் தெரியப்படுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்காத அதிபரையும் இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இனந்தெரியாதோரால், ஒரு சில மாணவர்களின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டிருப்பதாகவும் அதனோடு சம்பந்தப்பட்டவர்களையும் கைதுசெய்யவேண்டுமெனவும் மாணவர்கள் கோரினர்.
இந்நிலையில், ஆர்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சமுகமளித்த கொக்கட்டிச்சோலை பொலிஸார், பேஸ்புக்கில் புகைப்படங்களைப் பதிவேற்றியவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாகக் கூறினார்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிதற்கு அமைய, குறித்த சம்பவங்கள் தொடர்பில் தமக்கு எழுத்து மூலமாக வழங்குபடியும் அதற்கமைய உரிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
7 hours ago
7 hours ago