Menaka Mookandi / 2016 ஜனவரி 13 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள், விசேட தேவையுடையவர்கள் போன்றோரை கடந்த காலத்திலிருந்த அரசாங்கம் கவனிக்கத் தவறியதனால் தற்போது அவர்களது வாழ்வாதாரங்களும் குடும்பங்களும் நலிவடைந்து காணப்படுகின்றன என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மகாணசபை உறுப்பினர் மா.நடராசா தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (12) இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்த நாட்டிலே நல்லாட்சி என்ற ஒன்று உருவாகியிருக்கின்றது. இருந்த போதிலும் இனத்துவேசங்களை விதைத்த பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த நல்லாட்சியின் பங்காளிகளாக இருக்கின்றார்கள். இந்த நல்லாட்சியில் இருக்கின்ற தலைவர்களிடத்தில் தற்போது மாற்றங்கள் தென்படுவதை அவாதனிக்க முடிகின்றது. இந்த மாற்றங்கள் தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா? என்பதைக்கூட நிர்ணயிக்க முடியாதுள்ளது' என்றார்.
'எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும். அவற்றுக்கு நியாயமான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், இந்த நல்லாட்சி அரசுடன் ஒன்று சேராமல் எதிர்ப்பும் இல்லாமல் சாணக்கியமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான காலகட்டத்தில், தமிழ் மக்களைக் குழப்பும் வகையில் மக்கள் மத்தியில் சில புதிய அமைப்புக்களை உருவாக்கி எமது கூட்டமைப்புத் தலைவர்களின் முயற்சிகளைத் தாமதப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருவதையும் அவானிக்க முடிகின்றது. எனவே இவ்வாறான விடையங்களிலிருந்து மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
8 hours ago