Editorial / 2020 மார்ச் 10 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலமொன்று, இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.
பாதணிகள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்திலிருந்து முஹம்மது இஸ்மாயில் ஹபீப் (வயது 32) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய காத்தான்குடி, அப்றார் நகரில் வசித்து வந்த மேற்படி குடும்பஸ்தர், இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர், வர்த்தக நிலையத்தின் மாடியிலிருந்தே, சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026