2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூடு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மீது இனந்தெரியாதோர் திங்கட்கிழமை (14) இரவு துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுவிட்டு, அவரிடமிருந்து 04 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த முபாறக் பைறூஸ் (வயது 40) என்ற வர்த்தகர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளையில் சொந்தமாக வர்த்தக நிலையம் வைத்திருக்கும் இந்த வர்த்தகர், வர்த்தக நிலையத்திலிருந்து பதுளையில் அவர் தங்கியுள்ள வீட்டுக்கு காரில் சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டுக்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு இறங்கி வீட்டினுள் செல்லும்போது அவரை பின்தொடர்ந்த இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதுடன், பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X