2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் மரணம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் களுதாவளையில் நேற்றிரவு (03) இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்,  களுதாவளை பிரதான வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான 48 வயதுடைய மணலசேகரம் சரஸ்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிகுடி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியைக் குறுக்கீடு செய்த பெண் மீது மோத்தியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

பெண்ணின் சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு அதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் களுதாவளையைச் சேர்ந்த 21 வயது இளைஞன் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

இந்த இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், களுவாஞ்சிகுடி போக்குவரததுப் பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .