2026 பெப்ரவரி 05, வியாழக்கிழமை

விவசாயிகளுக்கு மார்ச் 10க்கு முன் காப்புறுதிப் பணம்

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி      

கடந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு, மார்ச் மாதம் 10ஆம் திகதிக்கு  முன்னர் காப்பறுதிப் பணம் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார், இன்று (22) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2020 – 2021 பெரும்போக வேளாண்மைச் செய்கையில் பாதிக்கப்பட்ட விசாயிகளுக்குரிய காப்புறுதிப் பணம் இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளன.

“எனினும், இதுவரையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு உரிய காப்புறுதிப் பணம் வழங்கப்படவில்லை.

“இது எனது கவனத்துக்கு மாவட்டத்திலுள்ள விவசாய அமைப்புக்களும், வட்டவிதானைமாரும், விவசாயிகளும் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க விவசாய அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.

“ஜனதிபதியின் உத்தரவுக்கமைய, எதிர்வரும் 2022.03.10ஆம் திகதிக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,078 விவசாயிகளுக்குரிய காப்புறுதிப் பணம் வழங்கப்படுமென விவசாய அமைச்சர் உத்தரவாதம் வழங்கியுள்ளார்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X