Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 நவம்பர் 09 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, ரீ.எல்.ஜவ்பர்கான்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சுகாதார உத்தியோகத்தர் சம்மேளனம் ஏற்பாடு செய்த வேலை நிறுத்தத்தில், மட்டக்களப்பு மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இன்று (09) இணைந்தனர்.
இதனால் இம்மாவட்டத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அலுவலகங்கள் யாவும் முற்றாக மூடப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளிலும் சுமார் 72 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கடமை புரிகின்றனர்.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் உட்பட கொரோனா விழிப்பூட்டல் மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் யாவும் மாவட்டத்தில் ஸ்தம்பித்தன.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, இம்மாவட்டத்தில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் நடவடிக்கைகளும் இன்றையதினம் பாதிக்கப்பட்டன.
இதேவேளை, மாவட்டத்தில் ஏனைய சுகாதார ஊழியர்களும் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .