Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவர், வைத்தியசாலை வளாகத்தில் இன்று (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்ணபுரம், வாழைச்சேனை எனும் முகவரியில் வசிக்கும் சின்னத்தம்பி பிள்ளையான் (வயது 64) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இப்பிரிவின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளதால் அவர் உயிரிழந்துள்ளாரெனத் தெரியவருகின்றது.
சடலம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாரும் வைத்தியசாலை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago