2025 மே 07, புதன்கிழமை

விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு

Niroshini   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தேவை நாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை காலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது,பொலிஸ் உத்தியோகத்தர்கள் பெண்கள், சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளை கையாளும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள், புலனாய்வு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தின் தேவை என்பன தொடர்பான கருத்துரைகள்  வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை,பெண்களுக்கெதிரன வன்முறை பற்றிய சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சிமுறைக் கையேடும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்,தேவை நாடும் மகளிர் அமைப்பின் இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன், அமைப்பின் சட்டத்தரணி அருள்வாணி சுதர்சன், உளவள துணையாளர்கள் ஜெயதிபா பத்மசிறி, நந்தினி தில்லையம்பலம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பதிகாரி ஏ.சி.ஏ.அஸீஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் 40 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X