Kogilavani / 2017 பெப்ரவரி 20 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் உள்ள களுதாவளைக் கிராமத்தில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் உகனை பிரதேசத்தைச் சேர்ந்த 19, 31 மற்றும் 38 வயதுடைய மூவரே, விபத்தில் காயமடைந்தவர்களாவர்.
இவர்கள், பொலநறுவையில் உறவினர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற மங்கல நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, மீண்டும் அம்பாறையில் உள்ள தமது வீட்டுக்கு பயணித்துக்கொண்டிருக்கையில், அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி, வேகக்கட்டுபாட்டை இழந்து, வேலியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதி, மதுபோதையிலும் நித்திரையிலும் பயணித்த நிலையிலே விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
20 Dec 2025