Suganthini Ratnam / 2017 மே 10 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காகச் செல்லும் சுமார் 500 பல்தினப் படகுகளுக்கு 'ட்ரான்ஸ்பொண்டர்' எனும் புதிய வகைக் கருவிகள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார்.
இந்த மீன்பிடிப் படகுகளுக்கும் இந்தக் கருவி வசதியைப் பெற்றுத்தருவதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதியளித்துள்ளார் எனவும்; அவர் கூறினார்.
கடற்றொழில் மற்றும் நீரியல்வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தக் கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கையின் மூலம்இ கடலில் மீன்களைத் தேடிப் பார்க்கக் கூடியதாக இருப்பதுடன்இ படகுகளில் பயணம் செய்யும் மீனவர்களுக்கு ஆபத்து நேரிடின்இ அவர்களை இதிலிருந்து விடுவிப்பதற்கு இந்தக் கருவியின் உதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அத்துடன் கடலுக்குள் செல்லுதல் மற்றும் கரையேறுதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கண்காணிப்பில் இருப்பதுடனான இந்த வசதிஇ மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும்; அவர் தெரிவித்தார்.
முக்கியமாக சர்வதேச கடல் சட்டத்துக்கு அமைய பல்தின மீன்பிடிப் படகுகளுக்கு இந்த நவீன உபகரண வசதி வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
9 hours ago