2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாவிக்குள் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப் வாவிக்குள் அமைக்கப்பட்டுள்ள கட்டிலிருந்து இன்று திங்கட்கிழமை மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவர் வாவிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, திராய்மடுப் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பென்சமின் ஜுலியன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த மீனவர் கட்டில் இருந்துகொண்டு வலை வீசியபோது தவறி விழுந்து வலையில் சிக்குண்டுள்ளார். இதனால்  அவருக்கு நீந்தி தப்பிக்க முடியாமல் போனதாக சம்பவத்தை கண்டவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X