Editorial / 2017 நவம்பர் 07 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஹஸ்பர் ஏ ஹலீம்
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும், எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வால் தயாரிக்கப்பட்ட முன்மொழிவு அறிக்கை மாகாண சபைகள் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக ஆராய்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு நேற்று (06) விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், தனது முன்மொழிவுகள் அடங்கிய அறிக்கையை, ஆணைக்குழுவின் இணைப்பாளர் நளீன், நிர்வாக அதிகாரி ஜயசறி ஆகியோரிடம் கையளித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை – புரிந்துணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையிலும், எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான மும்மொழிவுகள் என்னால் முன்வைக்கப்பட்டுள்ளது.
“எனது யோசனை மூலம் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் பகைமைகளை மறந்து ஒற்றுமைப்பட்டு செயற்படக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“ஆகவே, ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்புக் கூறக்கூடியவராகவும், மக்களது பிரச்சினைகளை நேரடியாக கையாளக்கூடிய வகையிலும் பிரதிநிதித்துவும் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் எந்த இனத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதன்போது, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட்டும் கலந்துகொண்டார்.
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025