Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வ.துசாந்தன்
கிராமங்களுக்குப் படையெடுக்கின்ற நிதி நிறுவனங்களில் அதிகூடிய வட்டி வீதத்துக்கு கடன் பெற்று மக்கள் கடனாளிகளாக மாறுகின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்திப் பணிப்பாளர் பி.குணரெத்தினம் தெரிவித்தார்.
இலகுவான மற்றும் குறைந்த வட்டி வீதத்தில் சமுர்த்தி வங்கிகள் ஊடாக கடன் வழங்கப்படும் போதும், இவ்வங்களில் கடன் பெறாமல், அதிகூடிய வட்டி அறவிடும் நிதி நிறுவனங்களில் மக்கள் கடன் பெறுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
கொக்கட்டிச்சோலை சமுதாய அடிப்படை வங்கியின் ஏற்பாட்டில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'சமுர்த்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 29 சமுர்த்தி வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமுர்த்தி வங்கிகள் சேமிப்பை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்துவதற்காக கடன் வழங்குகின்றது எனவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago