Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
'தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற நல்லாட்சியின் தத்துவங்கள் எமது மக்களுக்கு மென்மேலும் கிடைக்கவேண்டும். பெரும்பான்மையின மக்கள் அனுபவிக்கின்ற அனைத்து உரிமைகளயும் எமது மக்களும் அனுபவிக்கவேண்டும். அனைவரும் சமனானவர்கள்' இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை எருவில் மட். கண்ணகி வித்தியால கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கட்சிகளினால் எம்மீது தொடுக்கப்பட்ட விமர்சனங்களை விட எமது கட்சிக்குள்ளேயிருந்து வந்த விமர்சனங்களுக்கு நாம் பதில் கொடுக்க வேண்டியிருந்தது. எமக்கு வாக்களிக்க வேண்டாம் என துண்டுப்பிரசுரங்களையும் அச்சிட்டு வெளியிட்டார்கள். இவைகளுக்கு அப்பால் எம்மை எமது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள் என்றால், எமது மக்கள் தெளிவாகத்தான் இருந்திருக்கின்றார்கள் என நினைக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வாக்களித்ததை விட 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்;தலில் இரண்டு மடங்குகளாக வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைத்தமைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நன்றி கூறுகின்றது' என்றார்.

8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
20 Dec 2025