2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

26ஆவது நிர்வாக மாவட்டமாக ஒலுவில் மாவட்டத்தைப் பிரகடனப்படுத்தக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இலங்கையிலுள்ள 25 நிர்வாக மாவட்டங்களுடன் 26ஆவது நிர்வாக மாவட்டமாக ஒலுவில் மாவட்டத்தைப் பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்தி;டம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக   அக்கட்சியின்; தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அம்பாறையின்; சமூக, பொருளாதார, அரசியல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சனிக்கிழமை (4) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல்வேறு பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது. அவற்றில் ஒன்றே ஒலுவில் மாவட்டப் பிரகடனமும் ஆகும்' என்றார்.   

'காணி, கல்வி, புதிய அரசியல் யாப்புத் திருத்தம் உள்ளிட்ட விடயங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியுள்ளதுடன், அவை தொடர்பான முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளன.
காணிப் பிரச்சினையானது முஸ்லிம் சமூகத்துக்குப் பாரிய பிரச்சினையாக இருப்பதுடன், அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை  எமது கட்சி எடுத்துள்ளது.

முஸ்லிம்  சமூகத்துக்காக எமது தலைமை அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. இந்தச் சமூகத்துக்கு எங்கு அநீதி இழைக்கப்பட்டாலும்,  அதனைக் எமது  தலைமை தட்டிக் கேட்பதுடன், அதற்காக குரல் கொடுக்கும்.

நாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அனைத்து சவால்களையும் சந்திப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.
எனவே, எதிர்காலத்தில் எமது சமூகத்தின் காணி மற்றும் ஏனைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒன்றுபட்டு பயணிப்போம்' என்றார்.

 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X