Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
உள்ளக விசாரணை தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வைத் தராது. சர்வதேச பொறிமுறை மூலமே தீர்வை பெறமுடியுமென கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுதினம், பனிச்சையடியிலுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'உள்ளக விசாரணையென்ற விடயத்தைக் கொண்டுவந்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உள்ளக விசாரணைக்கு நாங்கள் துணைபோனால் அது உயிரிழந்த ஆத்மாக்களுக்கு செய்யும் துரோகமாகவே நோக்கப்பட வேண்டும். நாங்கள் எமது இனத்துக்கு துரோகம் இழைத்தவர்களாக வாழமுடியாது' என்றார்.
'கடந்த 65 வருடங்களில் தொடர்ந்து ஏமாற்றப்பட்ட நிலையிலேயே தமிழ் மக்கள் இருந்து வந்துள்ளனர். அகிம்சை ரீதியான போராட்டத்திலும் சரி, ஆயுத ரீதியான போராட்டத்திலும் சரி தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டதையே வரலாறுகள் எமக்கு காட்டிநிற்கின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
5 hours ago