Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
பெற்றோர் தமது பிள்ளைகளின் பிரச்சினைகளை சொல்லும்போது கேட்காமலும் அவர்கள் மீது அன்பு கரிசணை செலுத்தாமலும் விடுவதனாலேயே சமூகத்தில் வன்முறைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சிகள் சிறுவர் சமாதானப் பூங்காவின் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் தெரிவித்தார்.
சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு தாண்டவன்வெளி பியூட்ச மயின்ட் கின்டர் காடன் சிறுவர் பராமரிப்பு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு தாண்டவன்வெளி வயோதிபர் இல்லத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
அவர் மேலும் கூறுகையில்,
தற்கொலைகள், குடிப்பழக்கங்கள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படும் இந்நிலையில், குற்றவாளியாகக் காணப்படுவர்கள் கூட தண்டிக்கப்படுவதில் கால தாமதம் ஏற்படுவதும் வன்முறைகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன.
வீட்டில் உள்ள பாதுகாவலர்களே சிறுவர்களை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கும் பாதகமான நிலை நாட்டில் காணப்படுவது வேதனைக்குரியது.
அவர்களுக்கு தகுந்த உளநலப் பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் இக்குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.
மேலும்,பெற்றோர்களுக்கு தற்போது பெரும் கடமைப்பாடு உண்டு. சிறுவர்களை சுயமாகவும் சுதந்திரமாகவும் பெற்றோர் விடவேண்டும்.
இப்படியான நிகழ்வுகள் மாவட்ட , மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் நடத்தப்பட்டால் சமூகச் சீரழிவுகளைக் குறைக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago