Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
முல்லைத்தீவு கேப்பாபுலவு உட்பட இராணுவத்தினரால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்க கோரி இன்று வியாழக்கிழமை (16) கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடலுக்கு கிழக்கே அமைந்துள்ள கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீக காணியை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொய் வாக்குறுதிகளைக் கூறி தமிழர்களை ஏமாற்றாதே, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்காதே, வவுனியாவில் மக்களை ஏமாற்றியது போன்று இப்பொதும் மக்களை ஏமாற்றாதே, கம்பனிகளுக்கு காணி வழங்குவதை நிறுத்து மக்களுக்கு காணிகளை வழங்கு, காணி உரிமைகளை உடனடியாக மக்களுக்கு வழங்கு, பொய் வாக்குறுதிகளை வழங்குவதா நல்லாட்சி, எமது நிலம் எமக்கு வேண்டும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களை சுதந்திரமாக வாழ விடு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளை ஏந்தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago