Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்போது காலை உணவை உட்கொள்ள வைத்து அனுப்புவதன் மூலம் பாடசாலையில் பிள்ளைகள் உற்சாகமாக கல்வி கற்கும் சூழல் ஏற்படுமென சமுதாய சீர்திருத்த உத்தியோகஸ்தர் கே.புவனேந்திரன் தெரிவித்தார்.
உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் காத்தான்குடியிலுள்ள பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செயலமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போசாக்கு மற்றும் சிறுவர் மன நிலை தொடர்பான அறிவூட்டல் செயலமர்வு காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜே.சர்வேஸ்வரன் தலைமையில் காத்தான்குடி நகர சபையின் பொநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், 'பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்போது காலை உணவை உண்ண வைத்து அனுப்ப வேண்டும். அது போசாக்கான உணவாக இருக்க வேண்டும். அது அவர்களை பாடசாலையில் உற்சாகத்துடன் கல்வி கற்க வைக்கும். பிள்ளைகளுக்கு வீட்டுச் சூழல் சிறப்பானதாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பாசடாலை சூழலிலும் சிறந்த மன நிலையுடன் இருப்பார்கள்.
பிள்ளைகளுக்கு வீட்டில் ஏற்படும் தாக்கங்கள். வீட்டுச் சூழல் என்பன பாசடாலையிலும் தாக்கம் செலுத்தும் அதனால் பிள்ளைகளுக்கு வீட்டுச் சூழல் சரியானதாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் உள நல ஆரோக்கியம் என்பது முக்கியமாகும். பிள்ளைகளின் போசாக்கும் மன நிலையும் சிறப்பாக இருக்க வேண்டும்' என்றார்.
இந்த செயலமர்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.உருத்திரகாந்தன் பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.முசம்மில் உட்பட பாலர்பாடசாலைகளின் ஆசிரியைகள் பெற்றார்கள் கலந்து கொண்டனர்.

8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
8 hours ago
20 Dec 2025